
அப்பா ஆஸ்பத்திரில இருக்காரு.. இப்போ இது தேவையா? மகள் செய்த செயலால் கடுப்பான ரசிகர்கள்..
நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை சந்தித்துவருகிறது.
சமீபத்தில் வெளிநாட்டு சென்றுவந்த நடிகர் கமல்ஹாசன் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். பிரபல நடிகரும், மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவருமான கமல் அவர்கள் விரைவில் கொரோனாவில் இருந்து மீண்டு, அவர் நலம்பெற வேண்டும் என அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்காக பிராத்தனை செய்துவருகின்றனர்.
இந்நிலையில், அவரது மகள் நடிகை ஸ்ருதிஹாசன் அவரின் காதலர் மற்றும் தங்கையுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் சில புகைப்படம் மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், அங்கே உங்க அப்பா கொரோனா வந்து மருத்துவமனையில் இருக்காரு, நீங்க இங்க சந்தோஷமா இருக்கீங்க என்று கமன்ட் செய்து வருகின்றனர். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Advertisement
Advertisement