"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
ஸ்ரேயாவின் மகள் செய்த செயல்.! ஆச்சரியத்தில் துள்ளி குதித்த ஸ்ரேயா..
தமிழ் திரைத்துறையில் பிரபலமான நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இருந்தவர். பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
மேலும் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டியிருக்கிறார். திருமணத்திற்கு பின்பு திரைப்படங்களில் நடிக்காமல் விலகி இருந்த ஸ்ரேயா சரண், தற்போது மீண்டும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இவ்வாறு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் ஸ்ரேயா சரண் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார். தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது மகள்கள் குறித்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
அந்த வீடியோவில் போட்டோ ஷூட் செய்ய தயாராகிக் கொண்டிருக்கும் பொழுது ஸ்ரேயாவின் மகள் அவருக்கு கண்ணாடியைப் பிடித்துக் கொள்ள உதவி செய்கிறார். இதனை பார்த்து ஸ்ரேயா மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.