வசூலில் டாப்.. பாலையா டான்ஸ் வீடியோ வைரல்.! மகிழ்ச்சியில் ஊர்வசியுடன் நடனமாடி குதூகலம்.!
கல்யாணம் நடந்து 6 வருஷம் ஆச்சு.. 36 வயதில் கர்ப்பமான பிரபல பாடகி.. குவியும் வாழ்த்துக்கள்..
பிரபல பாடகி ஷ்ரேயா கோஷல் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ள தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அளவில் மிகவும் பிரபலமான பாடகிகளில் ஒருவர் ஷ்ரேயா கோஷல். ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என பல்வேறு மொழி படங்களின் பல்வேறு பாடல்களில் பாடியுள்ளார். மேலும் இவரது குரலுக்கு இந்தியளவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தமிழில் இவர் பாடியுள்ள பல்வேறு பாடல்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.
மேலும் இவரது அழகிற்கே இவற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் ஸ்ரேயா கோஷல் கடந்த 2015ஆம் ஆண்டு தன்னுடைய நீண்ட கால காதலர் ஷீலாதித்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்தநிலையில், தற்போது ஷ்ரேயா கோஷால் முதல் முறையாக கருவுற்றிருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்களுக்கு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.