பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
அட.. என்னம்மா இது! வடிவேலுவாக மாறிய குக் வித் கோமாளி ஷிவாங்கி! எப்படியிருக்கார் பாத்தீங்களா!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த நிகழ்ச்சிகள் ஏராளம். அவ்வாறு சமையல் திறமையை ஊக்குவிக்கும் வகையிலும், அதனையே ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையிலும் ஒளிபரப்பாகி பெருமளவில் பிரபலமாகி வரும் நிகழ்ச்சி குக்வித் கோமாளி.
அதன் மூன்றாவது சீசன் தற்போது மிகவும் விறுவிறுப்பாகவும், கலகலப்பாகவும் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் கோமாளிகள் வித்தியாசமான கெட்டப் போட்டு வந்து அனைவரையும் கவர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த வாரமும் கோமாளிகள் ஒவ்வொரு சினிமா காமெடி நடிகர்களைப் போல கெட்டப் போட்டுள்ளனர்.
இந்த நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது இனிமையான குரலால் அனைவரையும் வசியப்படுத்தி, பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு பலரது மனதையும் கொள்ளை கொண்ட ஷிவாங்கி இந்த வாரம் போக்கிரி படத்தில் இடம்பெற்ற வடிவேலு கெட்டப் போட்டுள்ளார். அந்த புகைப்படம் மற்றும் ப்ரமோ வீடியோ வைரலாகி வருகிறது.