அடடே ஷிவானி நாராயணனின் சின்ன வயது புகைப்படத்தை பார்த்து உள்ளீர்களா.? கொஞ்சம் கூட மாறாமல் அப்படியே இருக்கிறாரே.!

அடடே ஷிவானி நாராயணனின் சின்ன வயது புகைப்படத்தை பார்த்து உள்ளீர்களா.? கொஞ்சம் கூட மாறாமல் அப்படியே இருக்கிறாரே.!



Shivani narayanan childhood photos

தமிழ் சினிமாவில் அறியப்படும் நடிகையாக வலம் வருபவர் ஷிவானி நாராயணன். இவர் விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு எனும் சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த சீரியலுக்கு பின்பு இரட்டை ரோஜா போன்ற பல சீரியல்களில் நடித்து வந்தார்.

Shivani

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு படிப்படியாக தனது நடிப்புத் திறமையின் மூலம் முன்னேறி ஒரு சில படங்களில் நடித்தார். ஆனால் படங்கள் வெற்றி பெறவில்லை என்பதால் இவரது நடிப்பு பெரிதும் பேசப்படவில்லை.

இதன் பின்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு கலவையான விமர்சனங்களை பெற்று வெளியே வந்தார். இந்நிகழ்ச்சிக்கு பின்பு கமல் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Shivani

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் பட வாய்ப்புக்காக தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஷிவானி நாராயணனின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.