அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
தேவதையா? மனதை கவர்ந்த மோகினியா?..! ரசிகர்களை கன்பியூசாக்கிய சிவானியின் கியூட் போட்டோ..!!
கோலிவுட்டில் பல நெடுந்தொடர்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ஷிவானி நாராயணன். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் "பகல் நிலவு" என்ற நெடுந்தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

இதற்கு பின் இரட்டை ரோஜாவிலும் நடித்திருந்தார். பிறகு சிவானிக்கு பிக்பாஸில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தும் அந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தாத ஷிவானி, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி வந்த சில நாட்கள் வரையிலும் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தது. சமீபத்தில் அவருக்கு கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான "விக்ரம்" படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அத்துடன் தற்போது காவல்துறை அதிகாரியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும் சிவானி நாராயணன் அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார்.

தற்போது அதுபோன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். புடவையில் அவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது. மேலும், நீ தேவதையா? என் மனதை கவர்ந்த மோகினியா? என்று ரசிகர்கள் கமெண்டுகளை தெறிக்க விட்டுள்ளனர்.