செம ஜாக்பாட்தான்! ஷிவானிக்கு தாறுமாறாக குவியும் படவாய்ப்புகள்! அதுவும் யாரோடவெல்லாம் நடிக்கிறார் பார்த்தீர்களா!!
விஜய் டிவியில் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற தொடர்களில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ஷிவானி. அதனைத் தொடர்ந்து அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரெட்டை ரோஜா என்ற தொடரில் நடித்தார். பின்னர் ஒரு சில காரணங்களால் அவர் பாதியிலேயே அந்த தொடரில் இருந்து விலகினார். பின் ஷிவானி விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன்4 ல் கலந்து கொண்டு பெருமளவில் பிரபலமானார்.
மேலும் அதற்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவியத் துவங்கியது.
நடிகை ஷிவானி, லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'விக்ரம்' படத்தின் மூலம் வெள்ளிதிரையில் அறிமுகமாகவுள்ளார். அதனை தொடர்ந்து அவர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் அவர் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகும் வீட்ல விசேஷங்க என்ற படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் அண்மையில் கேரளா லாட்டரியை மையமாக வைத்து செல்வகுமார் இயக்கத்தில் உருவாகும் பம்பர் என்ற படத்தில் நடிகர் வெற்றிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது அவருக்கு மற்றுமொரு பிரமாண்டமான பட வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது சுராஜ் இயக்கத்தில் வடிவேலு ஹீரோவாக நடிக்கும் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ஷிவானி ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.