சினிமா

அடேங்கப்பா.. வேற லெவல்தான்! குக் வித் கோமாளி ஷிவாங்கி படைத்த அசத்தலான சாதனை! உச்சகட்ட ஹேப்பியில் அம்மணி!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது இனிமையா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது இனிமையான குரலால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவாங்கி. அதனைத் தொடர்ந்து அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்டு, தனது சேட்டையால், கலகலப்பான பேச்சால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்

ஷிவாங்கிக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு ஏராளமான பட வாய்ப்புகள் குவியத் துவங்கியது. அவர் சிவகார்த்திகேயனுடன் டான், உதயநிதி ஸ்டாலினின் ஆர்ட்டிக்கிள் 15 போன்ற படங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர் யோகிபாபு மற்றும் மிர்ச்சி சிவா நடிக்கும் காசேதான் கடவுளடா பட ரீமேக்கிலும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதற்கிடையில் ஷிவாங்கி சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி ஏராளமான சொந்த வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்துள்ளது.  இந்நிலையில் தற்போது அவரது youtube சேனல் 10 லட்சம் subscriberகளை கடந்துள்ளது. இந்நிலையில் அவருக்கு கோல்டு ப்ளே பட்டன் கிடைத்துள்ளது. அதனை மிகவும் மகிழ்ச்சியாக ஷிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்த நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.


Advertisement