சினிமா

வாவ்.. இப்படி ப்ரோபோஸ் பண்ணினா யாருக்குதான் புடிக்காது! வைரலாகும் ஷிவாங்கியின் வீடியோ! அதுவும் யாருக்கு பார்த்தீர்களா!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் வரவேற்பை பெற்று வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் வரவேற்பை பெற்று வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ஷிவாங்கி. ஷிவாங்கி என்றாலே முதலில் நமது நினைவுக்கு வருவது அவரது குழந்தைத்தனமும், வெகுளிதனமான பேச்சும்தான். 

ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் ஷிவாங்கி இதற்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெருமளவில் பிரபலமானார். ஆனால் அவரை மக்களிடையே பெருமளவில் கொண்டு சென்று சேர்த்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான். அதனை தொடர்ந்து ஷிவாங்கிக்கு டான் படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிக்கும்  வாய்ப்பும் கிடைத்துள்ளது.

இதற்கிடையில் கடந்த வாரம் விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் மற்றும் 99 சாங்ஸ் பட பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அப்பொழுது ஷிவாங்கி 99 பட ஹீரோவிற்கு அலைபாயுதே வசனத்தை கூறி குழந்தைத்தனமாக செம க்யூட்டாக ப்ரொபோஸ் செய்துள்ளார். இந்த வீடியோவை ஷிவாங்கி ரசிகர்கள் இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.


Advertisement