சினிமா

ப்பா.. ஷிவாங்கியா இது! குழந்தையில் கொழுகொழுவென எம்புட்டு அழகா இருக்காரு பார்த்தீர்களா!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற குக் வித் கோமாளி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ஷிவாங்கி. சிறுபிள்ளை போல அங்குமிங்கும் ஓடி அவர் செய்யும் சேட்டைகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து பெருமளவில் கவர்ந்தது. 

ஷிவாங்கி ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது பாடலால் பிரபலமானவர். அவரது தந்தை கிருஷ்ணகுமார் மற்றும் தாய் பின்னி கிருஷ்ணகுமார் இருவருமே கர்நாடக பாடகர்கள். குக் வித் கோமாளியை தொடர்ந்து ஷிவாங்கிக்கு சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தனது வெகுளியான குணத்தால், சுட்டித்தனத்தால் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள ஷிவாங்கி குழந்தையாக இருக்கும்போது அவரது அம்மா தூக்கி வைத்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. மேலும் அந்த புகைப்படத்தில் அவர்களுடன் பாடகி சித்ராவும் உடன் உள்ளார்.


Advertisement