என்னைக்குமே அவர்தான் எனது அண்ணா, அப்பாவுக்காக மன்னிப்பு கேட்டுக்கிறேன், வருத்ததுடன் கூறிய சாந்தனு ஏன் தெரியுமா?

என்னைக்குமே அவர்தான் எனது அண்ணா, அப்பாவுக்காக மன்னிப்பு கேட்டுக்கிறேன், வருத்ததுடன் கூறிய சாந்தனு ஏன் தெரியுமா?


shanthanu-ask-abology-for-his-father

அப்பா செய்த தவறுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன், என்னை மன்னித்துவிடுங்கள் என பாக்யராஜ் மகன் சாந்தனு தனது ட்விட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார்.மேலும் சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி தலைவனை மாற்றுகிற கூட்டத்தில் நான் இல்லை என்றைக்குமே விஜய்தான் எனது அண்ணா எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். இப்படம் தீபாவளிக்கு வெளிவர காத்திருக்கும் நிலையில் இப்படத்தின் கதை தன்னுடையது என்று கூறி உதவி இயக்குனராக வருண் ராஜேந்திரன் நீதிமன்றம் வரை சென்று போராடினார். 
 
பின்னர்  'சர்கார்' படம் வருண் ராஜேந்திரனின் கதை தான் என்றும், வருணை பெருமைப்படுத்தும் விதமாக படத்தின்போது அவர் பெயர் போட்டு நன்றி தெரிவிக்கவேண்டும் என திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜ் கேட்டுக்கொண்ட நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ்  அதற்கு ஒப்புக்கொண்டு 'சர்கார்' பட விவகாரம் முடிவுக்கு வந்தது. 

sarkkar
 இந்நிலையில் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள்  விஜயின் தீவிர ரசிகரான பாக்யராஜின் மகன் சாந்தனுவுக்கு எதிராக விமர்சனங்களை எழுப்பினர். ஆனால் அதற்கு சாந்தனு சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி தலைவனை மாற்றுகிற கூட்டத்தில் நான் ஒருவன் “இல்லை” ! என்றைக்கும் விஜய் அண்ணா , எனக்கு விஜய் அண்ணா தான் !   ஏன் அப்பா செய்ததற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்திருந்தார்.



மேலும் அப்பா தலைவர் பொறுப்பில் நியாயமாகவே நடந்து கொண்டதாகவும் சாந்தனு  கூறியுள்ளார்.