திடீரென தனது மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நிறுத்திய இயக்குனர் ஷங்கர்! என்ன காரணம்??

திடீரென தனது மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நிறுத்திய இயக்குனர் ஷங்கர்! என்ன காரணம்??


shankar-dropped-his-daughter-marriage-reception

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களை இயக்கி, பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவருக்கு ஐஸ்வர்யா, அதிதி என இரு மகள்கள் உள்ளனர். மேலும் அர்ஜித் என்ற மகனும் உள்ளார். இவர்களில் இளைய மகள் அதிதி தற்போது வெள்ளித்திரையில் குதித்துள்ளார். அவர் முத்தையா இயக்கியுள்ள விருமன் என்ற படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார். 

இப்படத்தை 2டி நிறுவனம் சார்பாக சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்நிலையில் இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரபல தொழிலதிபரின் மகனும், கிரிக்கெட் வீரருமான ரோகித் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அப்பொழுது கொரனோ பரவல் காரணமாக  நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் அந்த விழாவில் கலந்து கொண்டனர்.

shankar

இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் மே 1 தனது மகளின் திருமண வரவேற்பு விழாவை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்தார். மேலும் இதற்காக பிரம்மாண்டமாக செட் போடப்பட்டுள்ளது. மேலும் திருமண பத்திரிகைகள் அடிக்கப்பட்டு பிரபலங்கள் பலருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது அந்த நிகழ்ச்சி திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. மேலும் இதற்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை.