இதெல்லாம் ஒரு ப்ரமோஷனா?? டிடியால் கடுப்பான பிரபல பாலிவுட் நடிகர்!! தீயாய் பரவும் வீடியோ!!

இதெல்லாம் ஒரு ப்ரமோஷனா?? டிடியால் கடுப்பான பிரபல பாலிவுட் நடிகர்!! தீயாய் பரவும் வீடியோ!!


shamshera-movie-promotion-videi-viral

விஜய் டிவியில் நீண்ட ஆண்டுகளாக ஏராளமான ஹிட்டான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபல தொகுப்பாளினியாக இருந்தவர் திவ்யதர்ஷினி. இவரை  ரசிகர்கள் டிடி என அழைத்து வருகின்றனர். டிடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி விருது வழங்கும் விழாக்கள், ஆடியோ வெளியீட்டு விழா, பட ப்ரமோஷன் போன்றவற்றையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

டிடி தற்போது இந்திய அளவில் பிரபலமான தொகுப்பாளினியாக முன்னேறியுள்ளார். அவர் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரமாண்டமாக  உருவாகியுள்ள ஷம்ஷேரா படம் ஜூலை 25 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் டிடி ரன்பீர் கபூருடன் படத்திற்கு ப்ரமோஷன் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

அதில், ஆக்சனுக்காக ரெடியாகி வந்த ரன்பீர், டிடியின் காஸ்ட்யூமை பார்த்து என்ன இது? என்று கேட்கிறார். அதற்கு அவர் டான்ஸ் என்றுதான் என்னிடம் சொன்னாங்க. ஒரு நிமிஷம் சார் நான் ரெடியாகுகிறேன், அதற்கு முன் டான்ஸ் ப்ளீஸ் ஒரே ஒரு ஸ்டெப் சார் என்று கேட்கிறார். உடனே ரன்வீர் ஓகே சொல்லிவிட்டு இருவரும் டான்ஸ் ஆடுகின்றனர்.

டான்ஸ் ஆடி முடித்ததும் ரன்பீர் ஆக்சனுக்கு அழைக்கிறார். அதற்கு டிடி தோள் வலி, இடுப்பு வலி என மறுத்துவிட்டு, ஒரு போஸ்டரை வைத்து ஷம்ஷேரா படம் ஜூலை 22 ஆம் தேதி வெளியாகும் என தமிழில் கூறுகிறார். ஒன்றும் புரியாமல் திருதிருவென விழித்த ரன்பீர் இதெல்லாம் ஒரு பிரமோஷனா? யாரு டிடியை அழைத்தது என்று கோபத்துடன் டிடியை திட்டிகொண்டே செல்கிறார். இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.