சினிமா

அஜித்தை வீடியோ எடுத்ததால் வாழ்க்கையை இழந்த இளம்பெண் போனில் கதறல்! நடிகை ஷாலினி கொடுத்த பதிலால் அதிர்ச்சி!!

Summary:

தல அஜித் அண்மையில் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு சென்ற நிலையில் அங்கு பணிபுர

தல அஜித் அண்மையில் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு சென்ற நிலையில் அங்கு பணிபுரிந்த பர்ஸானா என்ற பெண் அவருடன் வீடியோ எடுத்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஷாலினி கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அவர் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டார். ஆனால் அங்கு மருத்துவமனையில் எந்த வேலையும் கொடுக்காமல் அலைக்கழித்து மீண்டும் பணியில் இருந்து நீக்கியுள்ளனர்.

மேலும் லோன் போன்றவற்றை காரணம் காட்டி சான்றிதழ்களை கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண் வருமானம் எதுவும் இல்லாமல், குழந்தைகள் கஷ்டப்படுவதாகவும் அஜித்தை சந்திக்க வாய்ப்பு  ஏற்படுத்தித் தருமாறும் அவரது மேலாளர் சுரேஷ் சந்திராவிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் முதலில் உதவுவதாகக் கூறிவிட்டு பின்னர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண் தற்கொலை முயற்சி செய்து கொண்டார்.

இந்நிலையில் அந்த பெண்ணிடம் போனில் பேசிய அஜித்தின் மனைவி நடிகை ஷாலினி, அஜித்தை வீடியோ எடுத்ததற்காக உங்களை பணி நீக்கம் செய்யவில்லையாம். கொரோனா ஆட்குறைப்பால் நிறைய ஊழியர்களை பணிநீக்கம் செய்தபோது உங்களையும் மருத்துவமனை நிர்வாகம் தன்னிடம் கூறியுள்ளது என கூறியுள்ளார். 

 இந்நிலையில், அந்த பெண் தொடர்ந்து உதவி கேட்டு கெஞ்சிய நிலையில் அவர் உங்களது நிலைமை புரிகிறது. ஆனால் உங்களைப் போல் நிறைய ஊழியர்கள் உதவி கேட்டுள்ளனர். பவுண்டேஷன் மூலமாகதான் உதவி செய்து வருகிறோம். நிறைய பேர் பட்டியலில் உள்ளனர் என கூறியுள்ளாராம். இந்த ஆடியோ வைரலான நிலையில் அவருக்கு உதவ முன் வர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Advertisement