21 வருஷத்திற்கு பிறகு மீண்டும் நடிக்கிறாரா ஷாலினி! அதுவும் எந்த படத்தில் பார்த்தீர்களா? செம சர்ப்ரைஸில் ரசிகர்கள்!

21 வருஷத்திற்கு பிறகு மீண்டும் நடிக்கிறாரா ஷாலினி! அதுவும் எந்த படத்தில் பார்த்தீர்களா? செம சர்ப்ரைஸில் ரசிகர்கள்!


shalini-may-be-act-in-ponniyin-selvan-movie

தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது உச்ச நட்சத்திரமாக ரசிகர்கள் மத்தியில் கொடிகட்டி பறப்பவர் தல அஜித். இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இவரது பிறந்தநாள் மற்றும் படங்கள் வெளியாகும் நாட்களை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடி வருவர்.

இந்நிலையில் நடிகர் அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.தல அஜித் அமர்க்களம் படத்தில் நடித்தபோது அவருக்கு நடிகை ஷாலினியுடன் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு குழந்தைகள் உள்ளனர். ஷாலினி அலைபாயுதே, கண்ணுக்குள் நிலவு என சில படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர். மேலும் அவர் நடித்த அலைபாயுதே திரைப்படம் இன்றும் பலருக்கும் பேவரைட்டாக உள்ளது.

Ajith

திருமணத்திற்கு பிறகு கணவர், குழந்தைகள் என குடும்பத்தை பொறுப்போடு கவனித்து வரும் நடிகை ஷாலினி மீண்டும் 21 ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்னத்தின் வரலாறு பேசும் பொன்னியின் செல்வன் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இயக்குனர் மணிரத்னத்தின் படம் என்பதால் இதற்கு அஜித் மற்றும் ஷாலினி ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. ஆனாலும் தல ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.