
தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் ஆபாச நாயகியாக நடித்து இந்தியளவில் ஏராளமான ரசிக
தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் ஆபாச நாயகியாக நடித்து இந்தியளவில் ஏராளமான ரசிகர்களை பெற்று பிரபலமானவர் ஷகிலா. அவர் அண்மையில் விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி சீசன் 2-வில் போட்டியாளராக கலந்துகொண்டு அசத்தலாக சமைத்து, இறுதி வரை சென்று இரண்டாவது இடத்தைப் பெற்றார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு பிறகு ரசிகர்களுக்கு ஷகீலா மீதான பார்வை முற்றிலும் மாறியது. மேலும் நிகழ்ச்சியில் கூட போட்டியாளர்கள், கோமாளிகள் அனைவரும் அவரை அம்மா, மம்மி என பாசமாக அழைத்து வந்தனர். இந்நிலையில் திருமணம் செய்துகொள்ளாத நடிகை ஷகிலா திருநங்கை ஒருவரை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
அவரது பெயர் மிலா. இவர் நடிகை மற்றும் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார். ஷகிலா மற்றும் மிலா இருவரும் ஒருவருக்கு ஒருவர் மிகுந்த பாசம் வைத்துள்ளனர். இந்த நிலையில் இருவரும் ஒன்றாக கருப்பு நிற மாடர்ன் உடையில் செம ஸ்டைலாக போட்டோ ஷூட் நடத்தி அந்தப் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.
Advertisement
Advertisement