வெள்ளத்தில் சிக்கிய சீரியல் செட் வீடுகள்.. கலக்கத்தில் தயாரிப்பு நிறுவனங்கள்.!Serial set House affected flood

பொதுவாக இல்லத்தரசிகள் மத்தியில் பொழுதுபோக்கு அம்சமாக இருப்பது சீரியல்கள் தான். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒரு முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக சீரியல்கள் மாறியுள்ளது. இதனையடுத்து தற்போது சனி மற்றும் ஞாயிறு என வாரத்தின் அனைத்து நாட்களிலும் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

Serial set

அதற்குக் காரணம் சீரியல்கள் பெரும்பாலும் குடும்ப உறவுகளை மையப்படுத்தி இருப்பதால், பெரும்பாலான காட்சிகள் வீட்டிற்குள் நடப்பது போலத்தான் படமாக்கப்படுகிறது. இதற்காக தனியாக வீடு போன்று செட் அமைத்து படமாக்கப்படுகிறது.

அதன்படி சென்னை ஏ ஆர் எஸ் கார்டனில் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் சன் டிவியின் இலக்கியா போன்ற சீரியல்களின் வீட்டின் செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் சென்னையில் பெய்த கன மழை காரணமாக சென்னை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Serial set

இந்நிலையில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சீரியலுக்காக அமைக்கப்பட்ட செட் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் சீரியல் ஷூட்டிங் தடைபட்டுள்ளது. இதனை சரி செய்ய 10 நாட்களுக்கு மேலாகும் என்பதால், ஏற்கனவே ஒளிபரப்பப்பட்ட எபிசோடுகளை மீண்டும் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.