மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
தளபதி 64ல் முக்கிய கதாபாத்திரத்தில் இணையும் பிரபல சீரியல் நடிகை! குஷியான ரசிகர்கள்! யார் தெரியுமா?
விஜய், இயக்குனர் அட்லி கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்து உருவாகியுள்ள படம் பிகில். இப்படம் தீபாவளியன்று ரிலீசாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் சாதனையும் படைத்தது .
இந்நிலையில் அதனை தொடர்ந்து விஜய் மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தளபதி64 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கவுள்ளார். மாளவிகா மோகன் ஏற்கனவே தமிழில் ரஜினியுடன் பேட்ட படத்தில் நடித்திருந்தார்.
அதுமட்டுமின்றி தளபதி 64 நடிகர் விஜய் சேதுபதி வில்லனாகவும் , மற்றும் மலையாள நடிகர் ஆன்டனி வர்கீஸ், நடிகர் சாந்தனு, நடிகர் பிரேம்குமார் ஆகியோரும் இந்த படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி இரண்டாவது கட்ட ஷூட்டிங் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தளபதி 64 படத்தில் பகல் நிலவு சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை சௌந்தர்யா நந்தகுமார் முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.சௌந்தர்யா ஒரு சிறந்த பாடகியாவார். மேலும் இதுகுறித்து அவர் விஜய்க்கு அருகில் நடிப்பதே எனக்கு கனவு நினைவானது போல உள்ளது என கூறியுள்ளார்.