அடக்கடவுளே.. படப்பிடிப்பில் பிரபல நடிகைக்கு ஏற்பட்ட விபத்து! எலும்பு முறிவு, பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சை!!

அடக்கடவுளே.. படப்பிடிப்பில் பிரபல நடிகைக்கு ஏற்பட்ட விபத்து! எலும்பு முறிவு, பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சை!!


Serial actress sana met accident in shooting spot

தமிழ் சினிமாவில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ராஜபாட்டை என்ற திரைப் படத்தில் வில்லியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை சனா. இப்படம் இவருக்கு பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. மேலும் இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களால் பெருமளவில் பாராட்டப்பட்டது.

நடிகை சனா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக இவர் தெலுங்கில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். இவ்வாறு வெள்ளித்திரையில் பிஸியாக இருந்த நடிகை சனா பின்னர் சின்னத்திரையில் களமிறங்கி எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் ஏற்று சிறப்பாக நடித்து வருகிறார்.

Sana
இந்நிலையில் நடிகை சனா படப்பிடிப்பின் போது தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவரது இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் கீழே விழுந்ததும் படப்பிடிப்பை நிறுத்திய படக்குழுவினர் உடனே அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். மேலும் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், சில நாட்கள் ஓய்வு எடுக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளனர். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.