
நல்லா இருக்கே...இரண்டாவதாக பிறக்க போகும் குழந்தையின் பெயரை இப்போதே அறிவித்த ஆல்யா மானசா! என்ன பெயர் பார்த்தீங்களா...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற ராஜாராணி தொடரில் கார்த்தி மற்றும் செம்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆலியா.
ராஜாராணி தொடரில் கணவன், மனைவியாக நடித்த இருவரும் பின்னர் நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஐலா என்ற அழகிய மகள் உள்ளார்.
இந்நிலையில் ஆலியா மானசா தற்போது விஜய் டிவியில் ராஜாராணி 2 தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். சீரியலில் பிஸியாக நடித்து வரும் இவர், தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார்.
இதனிடையே கர்ப்பமாக உள்ள ஆல்யா இப்போதே தனக்கு பிறக்கபோகும் குழந்தையின் பெயரை கூறியுள்ளார். அதன்படி ஆண் குழந்தை என்றால் அர்ஷ் என பெயர் வைப்பதாகவும், பெண் குழந்தை என்றால் லைலா எனவும் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement