யம்மாடியோ..!! அழகு என்ற சொல்லுக்கு அர்த்தம் நீதான்..! அழகு சீரியல் நடிகை ஸ்ருதி ராஜின் அசர வைக்கும் புகைப்படம்!

யம்மாடியோ..!! அழகு என்ற சொல்லுக்கு அர்த்தம் நீதான்..! அழகு சீரியல் நடிகை ஸ்ருதி ராஜின் அசர வைக்கும் புகைப்படம்!


serial-actor-sruthiraaj-latest-photo

சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ்ஜின் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி  வருகிறது.

சன் டிவியின் பெரிய வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று அதில் ஒளிபரப்பாகும் தொடர்கள்தான். இல்லத்தரசிகள் மட்டுமே சீரியல் பார்த்துவந்த காலம் மாறி, தற்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து மக்களும் சீரியல்களுக்கு அடிமையாகிவிட்டனர் என்றே கூறலாம்.

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றிபெற்ற தொடர்களில் ஒன்று அழகு. நடிகை ரேவதி முக்கிய காதாபாத்திரத்தில் நடித்துவந்த இந்த தொடரில், தொடரின் நாயகியாக நடித்தவர்தான் ஸ்ருதி ராஜ். இத்தொடரில் அவரது அளவுக்கு மீறிய நடிப்பின் மூலம் அனைத்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் தொடரின் மூலம் அறிமுகமான நடிகை ஸ்ருதி, அதனை தொடர்ந்து ஆபீஸ், அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், அபூர்வ ராகங்கள் போன்ற ஏராளமான தொடர்களில்நடித்துள்ளார்.

தற்போது சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பயங்கர பிசியாக உள்ளார். அவ்வப்போது  தனது புகைப்படங்களை வெளியிட்டுவரும் இவர், தற்போது  முகத்தில் அழகிய சிரிப்புடன் புடவை அணிந்த கீயூட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் "அழகு என்ற சொல்லுக்கு அர்த்தம் நீதான் என பலமுறை சொன்னாலும் அதை நீ புரிந்துகொள்வது போல் தெரியவில்லை "என கவிதை மலை பொலிந்து வருகின்றனர்.