சினிமா

நடிகர் சஞ்சீவ்வின் அழகான மனைவி மற்றும் குழந்தைகளை பாத்துருக்கீங்களா? புகைப்படம் இதோ!

Summary:

Serial actor sanjeev wife and kids photos

தமிழ் சினிமாவில் ஒருசில படங்கள், பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார் நடிகர் சஞ்சீவ். தளபதி விஜய்க்கு மிகவும் நெருங்கிய நண்பரான இவர் ஆரம்ப காதலத்தில் விஜய்யுடன் இணைந்து ஒருசில படங்களில் துணை நடிகராக தனது நடிப்பை தொடங்கினார். அதன்பிறகு சின்னத்திரை பக்கம் வந்த நடிகர் சஞ்சீவ் திருமதி செல்வம் தொடர் மூலம் முழுநேர சீரியல் நடிகராகவே மாறிவிட்டார்.

அதனை அடுத்து நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிவந்த நடிகர் சஞ்சீவ் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் யாரடி நீ மோகினி தொடரில் நடித்துவந்தார். தற்போது அந்த தொடரில் இருந்து விலகி சன் டீவியில் ஒளிபரப்பாகிவரும் கண்மணி என்ற தொடரில் நடித்துவருகிறார் சஞ்சீவ்.

நடிகர் சஞ்சீவும் பிரபல சீரியல் நடிகை ப்ரீத்தி என்பவரும் திருமணம் செய்துகொண்டனர். இவருக்கு லயா என்ற மகளும், ஆதவ் என்ற மகனும் உள்ளனர். பொம்மலாட்டம், பந்தம், ஆண்டாள் அழகர் போன்ற பிரபல தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சஞ்சீவ் மனைவி ப்ரீத்தி.

தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சூப்பர் மாம் என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் விளையாடிவருகிறார். இதோ அவர்களது குடும்ப புகைப்படம்.

 


Advertisement