
சஞ்சீவ் ஆலியாவின் மகள் ஐலாவின் குயூட் வீடியோ இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.
சஞ்சீவ் - ஆலியாவின் மகள் ஐலாவின் குயூட் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைபெற்றது ராஜாராணி தொடர். இந்த தொடரில் கார்த்தி மற்றும் செம்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள்தான் சஞ்சீவ் மற்றும் ஆலியா. இத்தொடரின் மூலம் இவர்களுக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாலாமே உருவாகினர்.
சீரியலில் கணவன் மனைவியாக நடித்த இவர்கள், பின்னர் காதல் காதல் வசப்பட்டு நிஜவாழ்விலும் கணவன் மனைவியாக மாறிவிட்டனர். திருமண வாழ்வை சந்தோசமாக வாழ்ந்து வரும் இவர்களுக்கு சமீபத்தில் ஒரு அழகான பெண்குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு "ஐலா சையத்" என பெயர் வைத்தனர்.
இந்நிலையில் விஜய் டிவி யில் ஆலியா தற்போது ராஜாராணி 2 சீரியலிலும், சஞ்சீவ் காற்றின் மொழி சீரியலிலும் நடித்து வருகின்றனர். மேலும் சீரியலில் ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும் சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்ட்டிவ் ஆகஇருந்துவரும் இவர்கள், சமீபத்தில் தங்கள் பேமிலியுடன் உள்ள வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் அதில் ஐலா பண்ணும் சுட்டியை பாருங்க... செம குயூட். இந்த வீடியோ இணையத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement