சினிமா

விஜய்க்காக செம்பருத்தி சீரியல் பார்வதி செய்துள்ள காரியத்தை பாருங்கள்!

Summary:

Semparuthi serial actress shabana talks about vijay

தளபதி விஜய் என்றாலே சினிமா பிரபலங்களுக்கு கூட மிகவும் பிடித்த ஒருவர். தமிழ் நாடு மட்டும் இல்லது இந்தியா முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டுள்ளார் தளபதி விஜய். தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தில் பிசியாக நடித்துவருகிறார் விஜய். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

இந்நிலையில் விஜய் குறித்து பிரபல சின்னத்திரை நடிகை ஒருவர் பேசியுள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி என்ற தொடரில் நாயகியாக நடிப்பவர் நடிகை ஷபானா.

அவர் சமீபத்தில் வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். இதில் தனக்கு பிடித்த நடிகர்கள் பற்றிய கேள்விக்கு பதில் அளித்தார். அவருக்கு நடிகர் விஜய் என்றால் மிகவும் பிடிக்குமாம்.

அவருக்காக விஜய் ஃபேன்ஸ் பக்கத்தை நடத்தி அதற்கு அட்மினாக இருக்கிறாராம். பல பேர் பின் தொடரும் இந்த பக்கத்தில் அவர் தான் அட்மின் என யாருக்கும் தெரியாமல் வைத்திருக்கிறாராம்.

அவருடன் தங்கையாக நடித்தால் போது ஹீரோயின் கேரக்டர் வேண்டாம் என கூறியுள்ளார்.

https://cdn.tamilspark.com/media/18135lml-3-18-1000x600.jpg


Advertisement