செம்பருத்தி சீரியல் நடிகைக்கு சத்தமில்லாமல் நடந்த திடீர் திருமணம்! இணையத்தை கலக்கும் அழகிய ஜோடியின் புகைப்படம்!
தற்காலத்தில் சினிமாக்களை விட தொலைக்காட்சி தொடர்களே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தொலைக்காட்சித் தொடர்களுக்கு பெரும் அடிமையாக உள்ளனர்.
இந்நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று பெருமளவில் வரவேற்பை பெற்றுவரும் தொடர் செம்பருத்தி. இத்தொடருக்கு ஏராளமான ரசிகர், ரசிகைகள் உள்ளனர்.
மேலும் அதனை நாள் தவறாமல் ஆர்வத்துடன் பார்த்தும் வருகின்றனர். இந்நிலையில் இத்தொடர் அதிக அளவு டிஆர்பியை பெற்று முன்னணி தொலைக்காட்சிகளுக்கு போட்டியாகவும் உள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் மித்ரா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை பாரதா நாயுடு. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர், மாடலிங் செய்து வந்த நிலையில் தமிழ் சினிமாவில் தேன்மிட்டாய் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் சில படங்களில் நடித்து வந்தார். மேலும் அவருக்கு சினிமாவில் பெரிய அளவில் படவாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் அவர் சீரியலுக்கு தாவினார்.
அதனைத் தொடர்ந்து சில சீரியல்களில் நடித்துவந்த அவர் தற்போது செம்பருத்தி சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் பரத் என்பருக்கும் எளிமையான முறையில் திருவண்ணாமலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.