சினிமா

அடேங்கப்பா.. செம்பருத்தி சீரியல் நடிகைக்கு இவ்வளவு பெரிய மகனா! ஹீரோக்களையே மிஞ்சிடுவார் போல!!

Summary:

அடேங்கப்பா.. செம்பருத்தி சீரியல் நடிகைக்கு இவ்வளவு பெரிய மகனா! ஹீரோக்களையே மிஞ்சிடுவார் போல!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் செம்பருத்தி. இத்தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த தொடர் டிஆர்பியிலும் முன்னணியில் வந்து சாதனை படைத்தது.

செம்பருத்தி தொடரில் வனஜா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து அனைவரையும் மிரள வைப்பவர் லக்ஷ்மி. இத்தொடரில் இவர் பேசும் தோரணையும், அசத்தலான நடிப்பும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. இந்த சீரியல் மெகா ஹிட் ஆனதற்கு இவரும் ஒரு காரணம் எனலாம். லக்ஷ்மி தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பேரன்பு தொடரிலும் நடித்து வருகிறார்.

பார்ப்பதற்கு சிறு வயது போல் இருக்கும் இவருக்கு நன்கு தோலுக்கு மேல் வளர்ந்த பெரிய மகன் உள்ளார். இந்நிலையில் அவர் அண்மையில் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், லக்ஷ்மி அவருக்கு வாழ்த்துக் கூறி தனது மகனுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அதனைக் கண்ட ரசிகர்கள் செம்பருத்தி வனஜாவிற்கு இவ்வளவு பெரிய மகனா!! என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.


Advertisement