சினிமா

செக்கச் சிவந்த வானம்: படம் பாத்தவங்க கமெண்ட் பண்ணுங்க; பாக்காதவங்க கமெண்டை படிங்க!!

Summary:

sekka sivantha vanam today release

மணிரத்தினம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் மற்றும் பலர் நடிப்பில் மல்டி ஸ்டார் படமாக உருவாகி, உலகம் முழுவதும் வெளியாகியுள்ள ‘செக்க சிவந்த வானம்’ படத்தை, ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்

 

திரையுலகில் பிரபலமாக இருக்கும் தமிழ் இயக்குநரான மணிரத்னம், தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் மற்றும் அரவிந்த் சாமி ஆகியோரை வைத்து ‘செக்க சிவந்த வானம்’ என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். இதில் நடிகர் பிரகாஷ் ராஜ், தியாகராஜன் நடிகைகள் அதிதி ராவ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஜெயசுதா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். 

Image result for sekka sevantha vaanam songs

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இதுவரையில் மழைக்குருவி, பூமி பூமி, கள்ளக் களவாணி, ஹையாட்டி என்ற நான்கு பாடல்கள் இப்படத்தில் வெளியாகி உள்ளன. அதில், மழைக் குருவி பாடல் சமீபத்தில் வெளியான பாடல்களிலேயே, அனைவருக்கும் பிடித்தமான பாடலாக அமைந்துள்ளது.  

இன்று வெளியான இந்த படத்திற்கு, அதிக அளவில் விமர்சங்கள் செய்துவருகின்றனர் ரசிகரகள். திரையரங்குகளில் இந்த படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது என ரசிகர்கள் கூறுகின்றனர். இப்படத்தை பார்த்த ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவருமே படத்தை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.
 


Advertisement