சினிமா

தோனியும் நீங்களும் ஒரே மாதிரிதான்.. பிரபல நடிகரை பாராட்டிய இயக்குனர்! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!

Summary:

Seenu ramasamy wish sivakarthicken comparing with dhoni

இந்திய அணிக்காக சர்வதேச உலகக்கோப்பைகள் மற்றும்  ஐசிசி போட்டிகளில் ஏராளமான கோப்பைகளை வென்று கொடுத்தவர் மகேந்திரசிங் தோனி. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இந்த செய்தி கோடிக்கணக்கான தோனி ரசிகர்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர்கள், அரசியல் பிரபலங்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும்  அவரை வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தோனி குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில்,  எங்களை அதிகளவில் ஊக்கப்படுத்தியதற்கும், சந்தோஷபடுத்தியதற்கும் மிக்க நன்றி நீங்கள் ஒரு உன்னதமான தலைவர். எங்களை மகிழ்விக்க நீங்கள் வேறு ஒரு யுக்தியை வைத்திருப்பீர்கள் என நம்புகிறேன். உங்களின் அடுத்த ஹெலிகாப்டர் ஷாட்டிற்காக காத்திருக்கிறேன் என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இதனை கண்ட இயக்குனர் சீனுசாமி சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்த நீங்களும் பலரையும் ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தி வருகிறீர்கள். மேலும் தோனி போலவே நீங்களும் உங்களது நண்பர்களுக்கும் புதிதாக வருபவர்களுக்கும் வாய்ப்பு அளித்து வருகிறீர்கள். நீங்கள் இருவருமே அடிமட்டத்தில் இருந்து உயர்ந்தவர்கள்  என சிவகார்த்திக்கேயனை பாராட்டி பதிலளித்துள்ளார். இதற்கு ரசிகர்களும் பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றன


Advertisement