சினிமா

ரத்து செய்யப்பட்ட சீமராஜா காட்சிகள்!! கொந்தளித்த ரசிகர்கள்

Summary:

seemaraja morning show stopped due to technical issues

சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகியுள்ள சீமராஜா இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாடு முழுவதும் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உச்சம் தொட்ட நடிகர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். இவரது நடிப்பில் தற்போது சீமராஜா படம் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், சீமராஜா படம் வெளியாகும் நாளை எதிர்பார்த்து காத்திருந்தனர் ரசிகர்கள்.

தொடர்புடைய படம்

இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்ததால் தியேட்டர்களில் அதிகாலை காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் முழுமையாக விற்கப்பட்டு தீர்ந்தது.

ஆனால் இன்று காலை தியேட்டருக்கு சென்ற ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. காரணம் kdm பிரச்சனையால் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டது தான். இதே பிரச்சனை நயன்தாராவின் இமைக்க நொடிகள் படத்துக்கும் வந்தது.

seemaraja க்கான பட முடிவு

தற்போது அனைத்து பிரச்சனைகளும் சரிசெய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. எனவே அடுத்து வரும் காட்சிகள் எந்த தடையும் இன்றி திரையிடப்படும் என்று தெரிகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Advertisement