தமிழகம் சினிமா

15 ஆண்டுக்கு முன்பே கடைசி ஆசையை கூறிய எஸ்பிபி.! ஆசையை நிறைவேற்றும் அவரது மகன்.!

Summary:

SBP, who made the last wish 15 years ago

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தநிலையில், திடீரென நேற்று முன்தினம் அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இந்தநிலையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் திரைப்பிரபலங்கள் மற்றும் இந்திய ரசிகர்கள் அனைவர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தான் இறந்தால் எனது உடலை பண்ணை வீட்டில்தான் அடக்கம் செய்ய வேண்டும் என 15 ஆண்டுகளுக்கு முன்பே தனது விருப்பத்தை தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து எல்லாபுரம் பகுதி மக்கள் கூறுகையில், அவர் சமூக அக்கறை கொண்டவர். இந்த பகுதியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவிகளை செய்துள்ளார்.

கொரோனா காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அவர் வழங்கியுள்ளார். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பண்ணை வீட்டில் வந்து வசித்தும் இருக்கிறார் என தெரிவித்தனர்.
இந்த பண்ணை வீட்டில் அவர் இருக்கும் போது, நான் இறந்துவிட்டால் என்னை எனது பண்ணை வீட்டிலேயே அடக்கம் என அவரது விருப்பத்தை கூறியிருக்கிறார். எனவே அவரது பண்ணை வீட்டில் இறுதிச்சடங்குகள் நடந்துவருகிறது.


Advertisement