பிரபல நடிகர் சாயாஜி ஷிண்டேவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! ரசிகர்கள் அதிர்ச்சி.! ஏன்? என்னாச்சு?sayaji-shinde-admitted-in-hospital

தமிழில் பாரதியாரின் வாழ்க்கை வரலாறு படத்தில் பாரதியார் கதாபாத்திரத்தில் மிகவும் தத்ரூபமாக, அப்படியே கண்முன் கொண்டு வந்து நடித்து மக்கள் மத்தியில் பெருமளவில்  பிரபலமானவர் சாயாஜி ஷிண்டே. இவர் 
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழி படங்களிலும் குணச்சித்திர மற்றும் வில்லனாக நடித்து மிரள வைத்துள்ளார். 

நடிகர் சாயாஜி ஷிண்டே தமிழில் பூவெல்லாம் உன் வாசம், அழகி, பாபா,வேலாயுதம், வெடி, அழகிய தமிழ் மகன், வேட்டைக்காரன், சந்தோஷ் சுப்பிரமணியம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். 65 வயது நிறைந்த சாயாஜி ஷிண்டேவுக்கு திடீரென நேற்று கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உடனடியாக அவரை குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள்,இதயத்திற்கு செல்லும் ரத்தகுழாய்களில் அடைப்பு இருப்பதை கண்டறிந்துள்ளனர். அதனை தொடர்ந்து அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யபட்டுள்ளதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் மருத்துவமனையிலிருந்து நடிகர் சாயாஜி ஷிண்டே வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அதில் அவர், அனைவருக்கும் வணக்கம். நான் மிகவும் நலமாக உள்ளேன். என்னை நேசிக்கும் ரசிகர்கள் என்னுடன் இருக்கும்போது நான் கவலைப்பட எதுவுமில்லை. விரைவில் குணமடைந்து  உங்களை மகிழ்விக்க திரையில் தோன்றுவேன்” என தெரிவித்துள்ளார்.