"கஸ்தூரி ஒரு மதவெறி பிடித்தவர்" சத்யராஜ் மகளின் சர்ச்சை கருத்து.!
சமீபத்தில் நடைபெற்ற தமிழக முற்போக்கு மாநாடு நிகழ்ச்சியில் உதயநிதி கலந்து கொண்டு சனாதன எதிர்ப்பு பற்றி பேசியிருந்தார். அதில் "டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை ஒழிப்பது போல் சமாதானத்தையும் ஒழிக்க வேண்டும்" என்று கூறியது சில மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து சனாதனத்திற்கு ஆதரவளித்த நடிகை கஸ்தூரி உதயநிதியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, "டெங்கு, மலேரியா போன்றவை உங்க அம்மாவுக்கும், மாப்பிள்ளைக்குமே அதிகமா இருக்குது. அதை சரி பண்ணுங்க. சனாதனம் பிடிக்காதவர்களுக்கு கோவில் சொத்து மட்டும் எதற்கு" என்று பேசியிருந்தார்
கஸ்தூரியின் பேச்சு பலதரப்பு மக்களிடையே எதிர்ப்பலையை ஏற்படுத்தியது. இதன்படி பிரபல நடிகர் சத்யராஜின் மகள் கஸ்தூரியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது, "சனாதானத்தால் சமத்துவத்திற்கும், சகோதரத்துவத்திற்கும் ஆபத்து. மேலும் இதனால் பெண்ணுரிமை பறிக்கப்படும். கஸ்தூரி பேசுவதை பார்த்தால் அவர் ஒரு மதவெறி பிடித்தவர் என்பது போல் தெரிகிறது. அவரின் பேச்சு முற்றிலும் தவறானது" என்று கூறியிருக்கிறார். சத்யராஜ் அவர்களின் மகளது பதிவிற்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.