நடிகர் சத்யராஜுக்கு இந்த நடிகரை பார்த்தால் பயமாக இருக்குமாம்! யார் அவர் தெரியுமா? - TamilSpark
TamilSpark Logo
சினிமா

நடிகர் சத்யராஜுக்கு இந்த நடிகரை பார்த்தால் பயமாக இருக்குமாம்! யார் அவர் தெரியுமா?

தமிழில் முதன் முதலில் இயக்குனர் டி. என். பாலு இயக்கத்தில் வெளியான சட்டம் என் கையில் என்ற படத்தில் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித்தார். அப்போது மக்களிடையே அவரது நடிப்பு வெகு விரைவாக சென்றடைந்தது. அதனை தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

வில்லனாக நடித்து வந்த சத்யராஜை, பாரதிராஜா அவர்கள், அவரது அடுத்தப் படமான 1986ல் கடலோரக் கவிதைகள் என்ற படத்தில் ஹுரோவாக அறிமுகம் செய்தார். அதன் பிறகு பல படங்களில் கதாநாயகன மட்டுமே நடித்து பிரபலமானவர்.

மேலும் சத்யராஜ் அவர்கள் வில்லன், ஹுரோ என்பதை தாண்டி சிறந்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராகவும் செயல் பட்டுள்ளார். அண்மையில் வெளியான பாகுபலி படத்தின் கட்டப்பா கதாபாத்திரம் யாராலும் மறக்க முடியாது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும் போது தான் முதலில் நடிக்க வரும் போது நடிகர் சிவக்குமாரை பார்த்தால் பயமாக இருக்கும் என்று கூறியுள்ளார். அதற்கு காரணம் அவரை போல ஒரு நல்ல நடிகனாகவும் என்னால் இருக்க முடியாது, நல்ல மகன், நல்ல கணவன் மற்றும் தந்தையாகவும் இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo