சினிமா

"சமந்தா மிகவும் அபாயகரமானவர்; கவனமாக இருக்க வேண்டும்" பிரபல நடிகர் அதிரடி பேச்சு

Summary:

Sarwanand about samantha in janu

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 96. இந்தப் படத்தினை தற்போது தெலுங்கில் ஜானு என்ற பெயரில் பிரேம் குமார் என்பவர் இயக்கி வருகிறார். 

ஜானு படத்தில் கதாநாயகனாக சர்வானந்த் மற்றும் கதாநாயகியாக சமந்தா நடிக்கின்றனர். தமிழில் 96 மிக்ப்பெரிய வரவேற்பை பெற்றதையடுத்து அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் சர்வானந்த் மற்றும் சமந்தா முழு ஈடுபாட்டுடன் இந்த படத்தில் நடித்துள்ளனர். 

நேற்று இந்த படத்தின் முன் வெளியீட்டு விழா நடந்தது. அந்த விழாவில் பேசிய நடிகர் சர்வானந்த், "சமந்தா மிகவும் அபாயகரமான போட்டியாளர்" என தெரிவித்துள்ளார். 

மேலும் பேசிய அவர், "சாய் பல்லவி, இந்த சமந்தா போன்ற நடிகைகளுடன் நடிக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் நடிகர்களையே பின்னுக்கு தள்ளிவிடுவார்கள். திரையில் சமந்தாவை பார்த்ததை விட அவர் எப்படிப்பட்ட திறமையானவர் என்பது அவருடன் நடிக்கும் போது நன்றாக தெரிகிறது" என்று புகழாரம் சூட்டியயுள்ளார். 


Advertisement