சினிமா

சர்க்கார் படத்திற்கு முதலில் அஜித் நடித்த படத்தின் பெயர்தான் வைத்தார்களாம்! என்ன படம் தெரியுமா?

Summary:

Sarkar movie updates and unknown facts

தளபதி என்றாலே மாஸ்தான். விஜய் படம் வெளியாகா போகிறது என்றாலே அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க ஆரம்பித்துவிடுவார்கள். இந்நிலையில் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது சர்க்கார் திரைப்படம்.

படம் முழுவதும் அரசியல் பேசப்பட்டிருப்பதால் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது சர்க்கார் திரைப்படம். அக்டோபர் இரண்டாம் தேதி சர்க்கார் படத்தின் இசைவெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாகா நடிப்பெற்றது. இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால் நடிகர் விஜய் பேசிய அரசியல் வசனங்கள்தான். உசுப்பேத்தறவன்ட உம்முனும், கடுப்பேத்துறவன்ட கம்முனும் இருந்தா வாழ்க்கை ஜம்முனு போகும்னு விஜய் பேசிய வசனங்கள் அரங்கம் முழுவதும் கைதட்டல்களை அதிகமாகின.

இந்நிலையில் சர்க்கார் திரைப்படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி விஜய் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. படத்தின் டீசர் சர்க்கார் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்றே கூறலாம். வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது சர்க்கார் படம்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க சர்க்கார் படத்திற்கு பெயர் வைத்தது பற்றி அதன் இயக்குனர் முருகதாஸ் அவர்கள் சில சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதுபற்றி அவர் கூறுகையில் முதலில் படத்திற்கு வில்லாதி வில்லன் என்றுதான் பெயர் வைத்ததாக கூறினார். ஆனால் படம் முழுவது அரசியல் வருவதால் பின்னர் சர்க்கார் என பெயரிட்டதாக கூறியுள்ளார் இயக்குனர் முருகதாஸ்.

ஆனால் வில்லன் என்ற பெயரில் நடிகர் அஜித் ஏற்கனவே ஒரு படம் நடித்திருப்பதனால்தான் வில்லாதி வில்லன் என்ற பெயரை சர்க்கார் என மாற்றியதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Advertisement