பொங்கலுக்கு பேட்டையும் இல்ல, விசுவாசமும் இல்லை! சர்க்கார் படத்தை வெளியிடும் பிரபல திரையரங்கம்!

பொங்கலுக்கு பேட்டையும் இல்ல, விசுவாசமும் இல்லை! சர்க்கார் படத்தை வெளியிடும் பிரபல திரையரங்கம்!


Sarkar movie on pongal day at madurai theater

இயக்குனர் சிவாவுடன் நான்காவது முறையாக கூட்டணி சேர்ந்து விசுவாசம் படத்தில் நடித்துள்ளார் தல அஜித். ஏற்கனவே வீரம், வேதாளம், விவேகம என மூன்று படங்களுக்கும் கலவையான விமர்சனங்களை பெற்றதை அடுத்து விசுவாசம் படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

அதேபோல சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே பேட்ட மற்றும் விசுவாசம் இரண்டு படங்களும் நாளை அதாவது ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகிறது.

Sarkar

அணைத்து திரை அரங்குகளும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது மதுரையில் உள்ள ஒரு திரை அரங்கம். அதாவது விசுவாசம், பேட்ட இரண்டு படங்களையும் தவிர்த்துவிட்டு பொங்கல் அன்று சர்க்கார் படத்தை திரையிட போவதாக அறிவித்துள்ளது.

சர்க்கார் படம் வெற்றிகரமாக ஓடினக்கொண்டிருக்கும் நிலையில் படத்தின் 75 வது நாளை முன்னிட்டு இந்த சிறப்பு ஏற்பட்டு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தளபதி ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர்.