சினிமா

கேரளாவில் 2ம் நாள் சர்கார் படத்திற்கு இதுதான் நிலைமையா? - எது உண்மை?

Summary:

Sarkar movie current status in kerala

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி தினமான நேற்று சர்க்கார் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் படம் வெற்றிகரமாக ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது.

படம் முழுவதும் அரசியல் என்பதால் படத்திற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்க்கு கிளம்பியுள்ளது. படத்தின் மய்ய கருவே அரசியல் பற்றியும், ஒவொரு வாக்காளரின் உரிமையை பற்றியதும்தான்.

மேலும் படத்தின் வசூல் பற்றி பல்வேறு தகவல்கள் வெளிவந்தாலும் அதிகார பூர்வமாக இன்னும் எந்த அறிவிப்பும் வரவில்லை. இந்நிலையில் தமிழகத்தை தாண்டி தளபதியின் கோட்டையாக விளங்கும் கேரளாவில் சர்க்கார் படம் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது.

தளபதிக்கு அவரது ரசிகர்கள் 175 அடி உயர கட் அவுட் வைத்து கலக்கினார்கள். இந்நிலையில் எதிர்பாராத அளவிற்கு சர்க்கார் திரைப்படம் கேரளாவில் ஓடவில்லை என்றும், முதல் நாள் தான் இப்படி என்றால் இரண்டாம் நாள் படத்திற்கான வரவேற்பு படு மோசம் என்று மலையாள சினிமா தரப்பில் கூறப்படுகிறது.  


Advertisement