சினிமா

தலையை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த தளபதி! எதில் தெரியுமா?

Summary:

Sarkar beasts thala visuvasam in twitter trending

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் விஜய் மற்றும் அஜித். இருவருக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவர்கள் இருவரின் படமும் வெளியாக போகிறது என்றாலே சமூக வலைத்தளங்கள் சூடு பிடிக்க ஆரம்பித்துவிடும். மேலும் விஜய் படம் வெளிவந்தால் அதனை தல ரசிகர்கள் கலாய்ப்பதும், தல படம் வெளிவந்தால் அதனை தளபதி ரசிகர்கள் கலாய்ப்பதும் வழக்கமான ஒன்றுதான்.

இந்நிலையில் இயக்குனர் சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்துள்ளார் தல அஜித். இந்த பாடம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே படத்தின் போஸ்டர்கள் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதேபோல் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெடிப்பெற்றது சர்க்கார் திரைப்படம். வசூல் ரீதியாகவும் பல சாதனைகளை படைத்துள்ளது இந்த படம்.

இந்நிலையில் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனம் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருக்கும் டாப் 10 ஹேஷ் டேக் லிஸ்டை வெளியிட்டது. அதில் விஜய்யின் #sarkar முதல் இடத்திலும் #visvasam இரண்டாவது இடத்திலும் இருக்கிறது.

1.#Sarkar
2.#Viswasam
3.#BharatAneNenu
4.#AravindhaSametha
5.#Rangasthalam
6.#Kaala
7.#BiggBossTelugu2
8.#MeToo
9.#WhistlePodu
10.#IPL2018


Advertisement