பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்! அவரது சினிமா வெற்றி பயணத்தின் ஒரு பார்வை!
பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் யார் தெரியுமா.?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிக முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதுவரை 6 சீசன்களை நிறைவு செய்த நிலையில், தற்போது 7வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல் உலகநாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் தற்போது 82 நாட்களை கடந்துள்ள நிலையில், இந்த சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி இந்த வார எவிக்ஷன் நாமினேஷனில் விசித்ரா, ரவீனா மற்றும் சரவண விக்ரம் ஆகியோர் உள்ளனர். இதில், குறைவான வாக்குகளை பெற்று சரவணன் விக்ரம் இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளதாக உறுதியான தகவல் வெளியாகி உள்ளது.