புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
வாந்தி எடுக்க வைத்த தேவையானி.. படத்திற்காக சரத்குமார் செய்த அதிர்ச்சி செயல்.! விக்ரமன் நெகிழ்ச்சி.!
வில்லன் To ஹீரோ :
தென்னிந்திய சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அதன் பின் கதாநாயகனாக உருமாறி புகழ்பெற்றவர் நடிகர் சரத்குமார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார். ஆரம்ப காலத்தில் நிறைய போலீஸ் வேடங்களில் நடித்த அவர் வாழ்க்கையில் சேரன் பாண்டியன் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின் நிறைய ஆக்ஷன் திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார்.
சூர்யவம்சம் :
கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியாகிய சூரியவம்சம் திரைப்படம் இன்றளவிலும் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படமாகும். இது இயக்குனர் விக்ரமன் இயக்கிய திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். தேவயானி மற்றும் ராதிகா ஹீரோயினாக நடித்த இந்தத் திரைப்படம் அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த திரைப்படத்தின் ஒரு காட்சியில் சரத்குமார் தன் தங்கை திருமணத்தில் சரியாக சாப்பிடாமல் கூட அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து கொண்டிருப்பார்.
இதையும் படிங்க: சிம்பிளாக திருமணத்தை முடித்த பிக்பாஸ் விக்ரமன்.! மணப்பெண் யாரு தெரியுமா?? வைரலாகும் புகைப்படங்கள்!!
கெட்டுப்போன உணவு :
அப்போது அவருக்கு தேவையானி ஊட்டி விடுவதைப் போல ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இந்த காட்சியில் நடிக்க மதிய நேரமே சாப்பாடு வாங்கி வைக்கப்பட்ட நிலையில் அது படப்பிடிப்புக்கு வரும்போது இரவு நேரம் ஆகிவிட்டது. அதற்குள் அந்த சாப்பாடு கெட்டுப் போனதாக கூறப்படுகிறது. அந்த காட்சியின் போது இதை யாரும் கவனிக்காமல், விட்டுவிட அந்த கெட்டுப்போன உணவை தேவையானி சரத்குமாருக்கு ஊட்டி விட்டுள்ளார். ஆனால், சரத்குமார் சற்றும் முகம் சுளிக்காமல் காட்சிக்கு ஏற்ற வகையில் நடித்து முடித்துவிட்டு, அங்கிருந்து ஓடி சென்று வாந்தி எடுத்துள்ளார்.
சரத்குமாரின் ஈடு இணையற்ற பொறுப்புணர்வு :
அப்போது விக்ரமன் பின்னாலேயே சென்று, "ஏன் வாந்தி எடுக்கிறீர்கள்.?" என்று கேட்டதற்கு, "சாப்பாடு கெட்டுப் போய்விட்டது"என்று சரத்குமார் தெரிவித்துள்ளார். படத்திற்காக டேக்கை கெடுக்க கூடாது என்ற எண்ணத்தில் சரத்குமார் இந்த அளவிற்கு டெடிகேஷனுடன் வேலை செய்பவர் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் விக்ரமன் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி சரத்குமாரின் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: "ஒரு டேட்டா கார்டு வச்சிக்கிட்டு" - நெப்போலியன் மகன் திருமணத்தை விமர்சிக்கும் நபர்களுக்கு தரமான பதிலடி.!