புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
"ஒரு டேட்டா கார்டு வச்சிக்கிட்டு" - நெப்போலியன் மகன் திருமணத்தை விமர்சிக்கும் நபர்களுக்கு தரமான பதிலடி.!
தமிழ் திரையுலகில் 90 களில் மிகப்பெரிய முன்னணி நட்சத்திரமாக வலம்வந்த நடிகர் நெப்போலியன், திருமணத்திற்கு பின்னர் அமெரிக்காவில் குடியேறினார். பின் அவ்வப்போது சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார். இவரின் மகன் தனுஷ் தசை சிதைவு பிரச்சனை கொண்டவர் ஆவார். இதனால் தற்போது வரை அவர் இருக்கையில் இருந்தபடியே தனது செயல்பாடுகளை கவனித்து வருகிறார்.
இதனிடையே, தனுஷின் திருமணம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. நெப்போலியனின் நெருங்கிய நண்பரின் மகள் அக்சயா, தனுஷை கரம்பிடிக்க சம்மதம் தெரிவித்தார். இவர்களின் திருமணம் ஜப்பானில் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக தனுஷின் காட்சிகள் பலவும் இர்பானின் அமெரிக்க பயணம் மூலமாக பெருமளவு வெளிப்பட்டது. அன்று தனுஷை ஆதரித்து பலரும் தங்கள் கருத்துக்களையும் பதிவு செய்திருந்தனர்.
இதையும் படிங்க: "நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
திருமணம் குறித்து கடும் விமர்சனம்
இதனிடையே, தனுஷின் திருமணம் தொடர்பான அறிவிப்பு வெளியானதும், சமூக வலைத்தளங்களில் தனுஷின் நிலையை வெளிப்படையாக விமர்சித்து, அவரின் மனம் நோகும் வகையில் பல சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்த விமர்சனங்களை கண்டுகொள்ளாமல், வாழ்க்கையில் நாங்கள் வெற்றியடைந்து காண்பிப்போம் எனவும் தனுஷ் மற்றும் நெப்போலியன் சார்பில் விடியோவும் பதிவு செய்யப்பட்டது.
விமர்சகர்களுக்கு குவியும் கண்டனங்கள்
இந்நிலையில், நெப்போலியனின் மகன் தனுஷ் - அக்சயா திருமணம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் விமர்சனங்களாக எழுந்து இருக்கிறது. இவைகளுக்கு பலரும் தங்களின் கண்டனப் பதிவுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
செங்காந்தளின் தரமான பதில்
அந்த வகையில், முகநூல் பயனர் ஒருவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில், "நெப்போலியன் அவருடைய பையன் தனுஷ் கல்யாணம்... அப்பப்பா எவ்வளவு பெரிய Toxic ஆளுங்களுக்கு மத்தியில வாழ்றோம் நாம... இது மாதிரி தரம் இல்லாத விமர்சனங்கள் நிறைய பாத்திருக்கோம்... சாதாரண முகநூல் பதிவு போட்ற ஒருத்தர கூட இவுங்க மாதிரி ஆட்கள் விட்டு வச்சது இல்லை...
எல்லாம் வக்கிரம்
ஆனா ஒரு மா/ற்றுத்திறனாளினு தெரிஞ்சும் எவ்வளவு வ/க்கிரமா பேசுறாங்க... அந்த பையன கல்யாணம் பண்ற பொண்ணுக்கும் அவுங்க குடும்பத்துக்கும் எதுவும் குறையாக தெரியல... அவுங்க சந்தோஷமா இருக்காங்க... உங்களுக்கு என்ன பிரச்சனை..?? ஒரு டேட்டா கார்ட போட்டு ஒரு ஆன்ட்ராயிட் மொபைல் வச்சுக்கிட்டு உள்ளூர் குடும்பத்துல இருந்து உலக குடும்பம் வரையும் அவ்வளவு வ/க்கிரமா பேசுறது..
வித்தியாசம் தெரியாத பிறவிகள்
ஆனா கண்டிப்பா இவுங்கள்லாம் திருந்த மாட்டாங்க, இப்படியே மத்தவுங்கள இழிவா பேசி திரியிற அவுங்களும் நிச்சயம் பிறர் வலி என்னைக்காவது அ/னுபவிப்பாங்க.. மத்தவுங்கள ட்ரோல் பண்றது வேற A/buse பண்றது வேறன்னு கூட வித்தியாசம் தெரியாத பிறவிகள்... எது எப்படியோ மணமக்களுக்கு வாழ்த்துக்கள்" என கூறியுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது. இந்தப் பதிவின் கருத்திலும், பலரும் தங்களின் சொந்த அனுபவத்தையும் பகிர்ந்து திருமண ஜோடிக்கு வாழ்த்துக்களை கூறுகின்றனர்.
பதிவு நன்றிசெங்காந்தள்
இதையும் படிங்க: ஜோடி பொருத்தம் சூப்பர்!! கங்கை நதி கரையில் காதலரை கரம்பிடித்த நடிகை ரம்யா பாண்டியன்.! வைரல் புகைப்படங்கள்!!