முதல் காட்சியே உலக அழகியோட.. - ரொமான்ஸ் காட்சிகள் குறித்து மனம் திறந்த சுப்ரீம்ஸ்டார் சரத் குமார்.!

முதல் காட்சியே உலக அழகியோட.. - ரொமான்ஸ் காட்சிகள் குறித்து மனம் திறந்த சுப்ரீம்ஸ்டார் சரத் குமார்.!


Sarath Kumar about Aiswarya Rai Romance Scene in Ponniyin Selvan Movie

மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் பிரம்மாண்ட வெற்றியடைந்ததை தொடர்ந்து இரண்டாம் பாகம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. 

Sarath Kumar

இந்த படத்தில் சியான் விக்ரம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார் உட்பட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்டு பேசிய சரத்குமார் எனக்காக கொடுக்கப்பட்ட முதல் காட்சியே நடிகை ஐஸ்வர்யாராயுடன் இருக்கும் காதல் காட்சி தான். 

Sarath Kumar

நான் இரண்டு முறை காதல் திருமணம் செய்து கொண்டவன். படப்பிடிப்பின் போது என்னை பார்த்து மணிரத்தினம் ரொமான்ஸ் செய்ய வரவில்லையா? என்று கேட்டார். எனக்கு ஒரு மாதிரியாகிவிட்டது உலக அழகியை கட்டிப்பிடிக்கும் காட்சி எனக்கு கொடுத்த சாருக்கு நன்றி என்று தெரிவித்தார்.