வாவ்.. சந்திரமுகி படதில் வரும் வடிவேலு மனைவியா இது?? மாடர்ன் உடையில் எப்படி இருக்கார் பாருங்க..

சந்திரமுகி படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்த ஸ்வர்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது சந்திரமுகி திரைப்படம். படம் வெளியாகி பல ஆண்டுகள் கடந்துவிட்டாலும் கூட, இந்த படத்தின் காட்சிகள், நகைச்சுவை அனைத்தும் மக்கள் மனதில் இன்றுவரை நீடித்திருக்கிறது.
ரஜினி, ஜோதிகா இருவரும் இந்த படத்தின் பெரிய வெற்றிக்கு காரணம் என்றாலும், வடிவேலுவின் காமெடி காட்சிகள் இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு ஒரு காரணம் எனலாம். அந்த அளவிற்கு வடிவேலு இந்த படத்தில் கலக்கியிருப்பார். அதிலும் ரஜினி, வடிவேலு, வடிவேலுவின் மனைவி இடையே வரும் காட்சிகள் ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் அளவுக்கு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் வடிவேலுக்கு மனைவியாக ஸ்வர்ணா என்ற காதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஸ்வர்ணா மாத்யூ. 1994-ஆம் ஆண்டு வெளியான தாய் மனசு என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானார் ஸ்வர்ணா, அதன் பின்னர் மாயாபஜார், கோகுலத்தில் சீதை, பெரிய தம்பி உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.
சினிமாவில் பிசியாக நடித்துவந்த இவர், கடந்த 2003ஆம் ஆண்டு வர்கீஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு தற்போது ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு ஸ்வர்ணா அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார்.
திரையில் தோன்றாவிட்டாலும், சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், தற்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பார்க்க பயங்கர மாடர்னாக, அடையாளமே தெரியாத அளவிற்கு இருக்கும் அவரது இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.