சினிமா

இவரு ஒன்னுமே தெரியாத பாப்பா - புகைப்பிடிக்கும் காட்சி குறித்து டகால்டி விட்ட சந்தானம்

Summary:

Santhanam explains about dacalty poster

இணையத்தை கலக்கும் சந்தானத்தின் டகால்டி பர்ஸ்ட் லுக்கில் இதை கவனித்தீர்களா!

சந்தானம் மாஸ் ஹீரோவாக நடித்துள்ள ஆக்சன் படமான டகால்டி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது.

சின்னத்திரையில் காமெடி தொடர்களில் அறிமுகமாகி பின்னர் தமிழ் திரைப்படங்களில் முன்னனிகாமெடி நடிகராக நடித்த சந்தானம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். 

இந்நிலையில் சந்தானத்தின் நடிப்பில் உருவாகி வரும் டகால்டி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளது. ஆக்சன் மற்றும் காமெடி கலந்து எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தினை 18 ரிலீஸ் சவுத்திரி மற்றும் சந்தானத்தின் ஹான்ட்மேட் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

டகால்டி படத்தின் போஸ்டரில் சந்தானம் வாயில் சிகரெட்டினை வைத்து பற்ற வைப்பது போன்ற காட்சி அமைந்துள்ளது. வழக்கம்போல இந்த காட்சி மக்கள் மத்தியில் சிறிய சலசலப்பை ஏற்படுத்தியது.

ஏற்கனவே தமிழ் சினிமாவில் இதைப்போன்று வாயில் சிகரெட்டுடன் வெளியிடப்பட்ட புகைப்படங்களுக்கு பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் இதைப் பற்றி ஒன்றுமே தெரியாதது போல் தனது ட்விட்டரில் பதிவில் விளக்கம் அளித்துள்ளார் சந்தானம்.

அதில், “டகால்டி படத்தின் போஸ்டர் கவனக்குறைவால் வெளியிடப்பட்டுவிட்டது. வாயில் சிகரெட்டுடன் இருப்பது அதிகம் சிகரெட் பிடிப்பதற்கு வழிவகுக்கும் என்பதை உணர்ந்து கொண்டேன். இனிமேல் என்னுடைய படங்களில் இதுபோன்று நடக்காது” என கூறியுள்ளார்.


Advertisement