பாகுபலி படத்தில் முதலில் கட்டப்பா ரோலில் நடிக்கவிருந்தது இந்த டாப் நடிகரா?? வெளிவந்த தகவல்!!

பாகுபலி படத்தில் முதலில் கட்டப்பா ரோலில் நடிக்கவிருந்தது இந்த டாப் நடிகரா?? வெளிவந்த தகவல்!!


Sanjay dutt first selected for kattappa role for pagubhali movie

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்து உலகளவில் மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டான திரைப்படம் பாகுபலி. சுமார் 500 கோடி பட்ஜெட்டில் பெரும் பிரம்மாண்டமாக இரு பாகங்களாக உருவான இப்படத்தை எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கியுள்ளார்.  தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் வெளிவந்த இப்படம் வசூலை வாரி அள்ளியது.

இந்த படத்தில் நாயகனாக பிரபாஸ் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். முரட்டுத்தனமான வில்லனாக ராணா டகுபதி மிரட்டியுள்ளார். மேலும் அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

Sanjay dutt

பாகுபலி படத்தில் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களால் பெருமளவில் கவனிக்கப்பட்டவர் நடிகர் சத்யராஜ். ஆனால் கட்டப்பா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க தேர்வானது பாலிவுட் டாப் நாயகன் சஞ்சய் தத்தாம். இந்த தகவலை இயக்குனர் ராஜமௌலியின் தந்தையும், எழுத்தாளருமான விஜயேந்திர பிரசாத் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.