
sandy crying in bigboss house
பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 3 50 நாட்கள் முடிவடைந்து மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன் என 6 போட்டியாளர்கள் கடந்த நாட்களில் வெளியேற்றப்பட்டனர்.
பிற போட்டியாளர்கள் குறைந்த ஓட்டுக்களை பெற்று வெளியேறினர். ஆனால் பிரபல நடிகர் சரவணன் ஒருசில காரணங்களுக்காக பிக்பாசால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில்10 பேர் பிக்பாஸ் வீட்டில் விளையாடி வந்த நிலையில் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு பிரபல நடிகை கஸ்தூரி வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்துள்ளார். மேலும் நேற்று லாஸ்லியா, அபிராமி, சாக்ஷி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்ட நிலையில் குறைவான ஓட்டுக்களை பெற்று சாக்ஷி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் சாண்டி அழுத வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மகளின் பிரிவை தாங்கிக்கொள்ள முடியாமல் சாண்டி, தனது குழந்தையின் புகைப்படத்தை கண்டு கண்ணீர் விட்டுள்ளார்.
மேலும் தொலைக்காட்சியில் அந்த காட்சிகள் ஒளிபரப்பப்படாத நிலையில் நீக்கப்பட்ட காட்சிகளில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ வைரலான நிலையில் ரசிகர்கள் சாண்டி குழந்தை மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் என நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Advertisement
Advertisement