நடிகர் விஷாலின் சண்டகோழி-2 படத்தின் ட்ரைலர் வெளியானது...! ரசிகர்கள் கொண்டாட்டாம்...!



sandakozhi-2-trailer-release

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை மற்றும் நடிகர் சங்க தலைவரான நடிகர் விஷால் நடித்து லிங்குசாமி இயக்கிய மெகா ஹிட் படம் சண்டக்கோழி. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது படப்பிடிப்பு முடிந்து வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் இணை நாயகியாக வரலட்சுமி சரத்குமார் நடித்திருக்கிறார். இப்படத்திற்க்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். 

நடிகர் விஷால் நடித்து அவரே இந்த படத்தை தயாரிக்கவும் செய்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை வெளியிட இருக்கிறது. இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் நேற்று ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் விஷால் ரசிகர்கள் அனைவரும் அவரவர் கருத்துக்களை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். மேலும் இந்த படம் அடுத்தமாதம் அக்டோபர் 18ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கபட்டுள்ளது.

இந்த படத்தின் ட்ரைலர் கீழே இணைக்கப்பட்டுள்ளது...