பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்! அவரது சினிமா வெற்றி பயணத்தின் ஒரு பார்வை!
ஆபரேஷன் முடிந்தபிறகு தர்ஷன் காதலியின் நிலைமையை பார்த்தீர்களா!! தீயாய் பரவும் பரிதாப புகைப்படம்!!

பிக்பாஸ் சீசன் மூன்று இறுதிக்கட்டத்தை நோக்கி மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. வெற்றிகரமாக 100 நாட்களை கடந்துள்ள இந்த நிகழ்ச்சிகள் 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில் தற்போது சாண்டி, லாஸ்லியா, ஷெரின், முகேன் ஆகிய 4 பேர் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் இலங்கையை சேர்ந்த தர்சன். அவர் இறுதி வரை சென்று பிக்பாஸ் பட்டத்தை வெல்வார் என அனைவரும் பெருமளவில் எதிர்பார்த்த நிலையில் குறைந்த வாக்குகளை பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.
மேலும் தர்ஷனின் காதலி நடிகை சனம்ரெட்டி. அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது தர்சனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தார். மேலும் தர்ஷன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய உடன் அவருடன் எடுத்த புகைப்படத்தையும் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் சனம் ரெட்டி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, அதில் டியூமர் பற்றி சில மாதங்களுக்கு முன்பு தெரியவந்தது.ஆனால் அதனை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.ஆனால் இப்போது அதற்காக சர்ஜரி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன் என கூறி இருந்தார்.
அதனைத்தொடர்ந்து தற்போது ஆபரேஷனுக்கு பிறகு தான் நலமாக இருப்பதாகவும், இரு நாட்களில் சரியாகி விடுவேன் என்றும் கூறியுள்ளார். மேலும் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி எனவும் பதிவிட்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.