சினிமா

ஊரடங்கால் உணவின்றி தவித்த தெரு நாய்களுக்கு உணவளித்த பிரபல நடிகை.!

Summary:

Samyutha gave food to street dogs

கொரோனா வைரஸ் கோரத்தாண்டவத்தால் நாடு முழுவதும் ஏப்ரல் 15-ம் தேதிவரை யாரும் வீட்டை வெளியே வராமல் இருக்க வேண்டும் என்று தெரிவித்து ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் தங்களது வீடுகளிலேயே முடங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது.

இதனால் தெரு ஓரங்களில் ஆதரவற்று இருக்கும் மக்கள், முதியவர்களுக்கு பொது மக்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறு சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி தெரு ஓரங்களில் இருக்கும் தெரு நாய்கள் மற்றும் பூனைகளுக்கும் உணவு அளிக்குமாறு கேட்டு கொண்டுள்ளனர்.


அதன்படி கன்னட திரைப்பட நடிகை சம்யுக்தா ஒரநாடு, ஊரடங்கால் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் தெருநாய்களுக்கு உணவளித்த காட்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில் அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த ஒரு வாரமாக நாய்கள் உணவு இல்லாமல் போராடி வருவதைக் கண்டு மனம் உடைகிறது. 

நான் உள்பட சிலர் சேர்ந்து தெருநாய்களை கண்டறிந்து உணவளித்து வருகிறோம்.இதற்கு உதவியாக இருக்கும் பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி. தேஜஸ்வி சூர்யாவுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.


Advertisement