அடேங்கப்பா.. நடிகர் சமுத்திரகனிக்கு இவ்ளோ பெரிய மகனா! அவரை நீங்க பார்த்துருக்கீங்களா.! வைரலாகும் புகைப்படம்!!

அடேங்கப்பா.. நடிகர் சமுத்திரகனிக்கு இவ்ளோ பெரிய மகனா! அவரை நீங்க பார்த்துருக்கீங்களா.! வைரலாகும் புகைப்படம்!!



samuthirakani-son-photo-viral

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர் என பன்முகத் திறமை கொண்டு விளங்குபவர் சமுத்திரக்கனி. உன்னைச் சரணடைந்தேன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்த அவர் அதனைத் தொடர்ந்து பல படங்களை இயக்கியுள்ளார். மேலும் சமீபத்தில் இவரது இயக்கத்தில் தம்பி ராமையா நடிப்பில் உருவான வினோதய சித்தம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.  

சமுத்திரக்கனி இயக்குனராக மட்டுமின்றி நடிகராக களமிறங்கி பல படங்களில் தனது அசத்தலான நடிப்பால் அனைவரையும் கவர்ந்துள்ளார். இவர் பொதுவாக சமூக கருத்துமிக்க படங்களிலேயே நடித்து வந்தார். சமுத்திரகனி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் "ரைட்டர்”. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்றது.

Samuthirakani

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.  நடிகர் சமுத்திரக்கனியின் மகன் ஹரி விக்னேஷ். இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் சமுத்திரக்கனிக்கு இவ்வளவு பெரிய மகனா என ஆச்சரியம் அடைந்துள்ளனர். ஹரி விக்னேஷ் நடிப்பில் அதிக ஆர்வம் கொண்டவராம். சில குறும்படங்களையும் இயக்கியுள்ளாராம்.